கள்ளக் காதலால் கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண்

ByEditor 2

Apr 17, 2025

கள்ளக் காதலால் , பெண் யூடியூபர் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான்.

சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

இந்நிலையில் ரவீனாவுக்கு சுரேஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரவீனா – சுரேஷ் இருவரும் இணைத்து ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

கணவன் பிரவீன் மற்றும் குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், எதிர்ப்பையும் மீறி ரவீனா சுரேஷுடன் இணைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யூடியூபில் இயங்கி வந்துள்ளார்.

அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது. இதற்கிடையே கணவன் பிரவீன், கடந்த மார்ச் 25ஆம் திகதி ரவீனா சுரேஷுடன் அந்தரங்கமான நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

இதனால் இருவருடனும் பிரவீன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு சென்று, 6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வடிகானில் வீசியுள்ளனர்.

பின்னர் சடலம் மார்ச் 28ஆம் திகதி அழுகிய நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் பொலிஸார் சிசிடிவியை ஆராய்ந்ததில் உண்மை வெளிப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணைக்குப் பின் இருவரும் தற்போது கைது செய்துள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *