கேஸ் அடுப்பில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல….

ByEditor 2

Apr 8, 2025

கிராமங்கள் உட்பட நகரங்களில் உள்ள அனைத்து சமையலறைகளிலும் கேஸ் அடுப்பு நுழைந்து விட்டது.

நமக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பை ஆன் செய்வதும், சிம்மில் வைப்பதும் மட்டும் தான். ஆனால் கேஸ் அடுப்பில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

வழக்கத்திற்கு மாறாக கேஸ் அடுப்பு சுடர் நிறத்தில் மாற்றம் காண்பித்தால் அதில் ஏதோவொரு பிரச்சினை உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

கேஸ் அடுப்பின் நெருப்பை நாம் எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம், ஆனால் அது படிப்படியாக ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும்.

கேஸ் அடுப்பு எரியும் நிறத்தை வைத்து ஆபத்தான நிலையை கண்டுபிடிக்கலாமா? அறிவியல் ரகசியம் | Does Your Gas Stove Flame Dangerous For Health

அந்த வகையில், கேஸ் அடுப்பின் சுடர் பாதுகாப்பானதா அல்லது ஆபத்தானதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

சரியான சுடரின் நிறம்

சமைக்கும் பொழுது ​​பெரும்பாலும் உணவின் தேவைக்கேற்ப நெருப்பின் அளவை சரிச் செய்து கொள்வது வழக்கம். ஆனால் சுடரின் நிறம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதனை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான சுடர் நிறம் பெரும்பாலும் நீல நிறத்தில் ஒரு சிறிய மஞ்சள் முனையுடன் இருக்க வேண்டும். நீல நிற சுடர் என்பது கேஸ் சரியாக எரிகிறது, குறைந்தபட்ச தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளுடன் எரியும். 

கேஸ் அடுப்பு எரியும் நிறத்தை வைத்து ஆபத்தான நிலையை கண்டுபிடிக்கலாமா? அறிவியல் ரகசியம் | Does Your Gas Stove Flame Dangerous For Health

 ஆபத்தான நிலை

கேஸ் பயன்படுத்தும் அளவு பாத்திரத்தின் அளவு மற்றும் சமைக்கும் உணவுகளின் தன்மை இரண்டிலும் இருக்கிறது, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு தீப்பிழம்புகள் இரண்டும் வாயு வெளியேற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

அடுப்பு இப்படி எரியும் பொழுது அதிலிருந்து கார்பன் மோனாக்சைடை உருவாக்கக்கூடும். மணம் இருக்காது மாறாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கேஸ் அடுப்பு எரியும் நிறத்தை வைத்து ஆபத்தான நிலையை கண்டுபிடிக்கலாமா? அறிவியல் ரகசியம் | Does Your Gas Stove Flame Dangerous For Health

நிறம் மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்

நுனியில் மஞ்சள் நிறத்துடன் இருக்கும் நீல நிறச் சுடர் ஆபத்தானது. சுடர் சுற்றிலும் நிலையாக இருக்க வேண்டும். சுடர் விட்டு விட்டு வருவது பிரச்சனையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அடுப்பின் பக்கவாட்டுப் பகுதிகளில் அல்லது பாத்திரத்தில் ஏதேனும் கருப்புப் புள்ளிகள் இருந்தால் அவை ஆபத்தான விளைவுகளாக பார்க்கப்படுகிறது.

கேஸ் அடுப்பு எரியும் நிறத்தை வைத்து ஆபத்தான நிலையை கண்டுபிடிக்கலாமா? அறிவியல் ரகசியம் | Does Your Gas Stove Flame Dangerous For Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *