பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எச்சரிக்கை

ByEditor 2

Apr 10, 2025

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் ஆண்மை பறிபோகும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தரக் கட்டுப்பாட்டுத் தலைவர் குறிப்பிட்டுள்ளதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்கள் சூரிய ஒளியில் வெளிப்பட்டு வெப்பமடையும் போது, ​​அவற்றில் உள்ள நச்சு இரசாயனத் துகள்கள் தண்ணீரில் சேர்க்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எச்சரிக்கை ; ஆண்மை பறிபோகும் அபாயம் | Warning To Men Using Plastic Bottles

பெண்பால் பண்புகள்  

இந்த நச்சு இரசாயனத் துகள்கள் பெண் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனைப் போலவே இருப்பதால், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தொடர்ந்து தண்ணீர் குடிக்கும் ஆண்கள் பெண்பால் பண்புகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் மருத்துவர் குறிபிட்டுள்ளார்.

இந்த ரசாயனம் கர்ப்பிணிப் பெண்கள், கருக்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்தானது என்றும், ஆண்களின் குழந்தைகளைப் பெறும் திறனையும் இது பாதிக்கிறது என்றும் மருத்துவர் குறிபிட்டுள்ளார்.

எனவே, மக்கள் எப்போதும் பிளாஸ்டிக் கொள்கலன்களை விட, கண்ணாடி, மண் பாத்திரங்கள் அல்லது பிற பாதுகாப்பான கொள்கலன்களை சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உணவு மற்றும் பானங்களை சேமிக்க பிளாஸ்டிக் கொள்கலன்களைத் தேர்வுசெய்தால், கொள்கலன் அல்லது பாட்டிலில் 5 என்ற எண் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை  எப்போதும் சரிபார்க்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *