மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா?

ByEditor 2

Apr 5, 2025

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.

மாதவிடாய் இரத்தப்போக்கு பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையில் நீடிக்கும்.இது ஒரு ஆரோக்கியமாக மாதவிடாய் சுழற்ச்சியாக பார்க்கப்படுகின்றது.

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

அப்படி இல்லாதவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பதாகவே அர்த்தம்.அது குறித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

சீரற்ற மாதவிடாய் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட பலக் காரணங்கள் உள்ளன. பொதுவாக குறைந்த இரத்தப்போக்கு உடைய மாதவிடாய் ஏற்படுவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம் மற்றும் உணவு முறை மாற்றங்கள் கூட காரணமாக அமையும்.

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

மாதவிடாய் காலத்தில் இரண்டு தினங்களுக்கு மட்டுமே குருதி போக்கு இருப்பதற்கான காரணங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய காரணங்கள்

மாதவிடாய் இரத்தப்போக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே இருந்து பின் நின்றுவிடுவதற்காக முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம்.

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

 மன அழுத்தம் ஏற்படுவது உடலின் ஹார்மோன் சமநிலையை மோசமாக பாதிக்கும். ஹார்மோன் பாதிப்பின் காரணமாக சீரற்ற மாதவிடாய் அல்லது ஓரிரு நாட்கள் மட்டும் நீடிக்கும் மாதவிடாய் பிரச்சினை தோன்றலாம். 

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

 தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்பர்களாக இருந்தாலும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் உங்களுக்கு குறைவான உதிரப்போக்கு இருக்கும்.

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

தீவிர உடற்பயிற்சிகளால் அண்ட விடுப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஹார்மோன்களின் வெளியீட்டைத் தடுக்கும். இதனால் கூட ஓரிரு நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் கூட குறைந்த மாதவிடாய் இரத்தப்போக்கு குறைவான நாட்களில் நின்றுவிடும் பிரச்சினை இருக்கலாம்.

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

தைராய்டு சுரப்பி தான் உடலின் வெப்பநிலை, வளர்சிதை மாற்றம் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சுரப்பியாக செயல்படுகின்றது. இதில் ஏற்படும் பிரச்சினை மாதவிடாய் சுழற்சியில் தாக்கம் செலுத்தும்.

இது தவிர சில மருந்துகள் இரத்தக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், இரத்தத்தை உறைய செய்யும் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டு அடங்கிய  மருந்துகள் எடுத்துக் கொள்வதும் போதும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா? மருத்துவ விளக்கம் | Is It Normal For Your Period To End In 2 Days

ஸ்டெராய்டு மருந்துகள் மாதவிடாய் சுழற்சி மற்றும் மாதவிடாய் இரத்தப்போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதுவாக இருப்பினும் மாதவிடாயில் சிக்கல்கள் இருப்பதாக உணர்ந்தால் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *