நிலவை தாக்க தயாராகும் விண்கல்

ByEditor 2

Apr 4, 2025

பூமியை 2024 YR4 என்ற விண்கல் தாக்கும் என்று விஞ்ஞானிகளால் பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் ஆபத்து தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

எனினும் , இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த விண்கல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமிக்கு ஆபத்து

இதன்போது இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்த ஆய்வுகளில் பூமிக்கு ஆபத்து இல்லை என கண்டறியப்பட்டதோடு, நிலவுக்கு அதன் தாக்கம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சிலியில் உள்ள நாசாவின் ஆய்வு மையத்தில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

வியாழன் கோளுக்கும், செவ்வாய் கோளுக்கும் இடையே விண்கல் குவியல்கள் இருக்கின்றன.

இதிலிருந்து விண்கற்கள் சில சூரியனை நோக்கி வருகைத்தரும். இவ்வாறு வரும்போது அது பூமி மீது மோதுவதற்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விண்கல்லின் திசை

இதன்படி, தற்போது விண்வெளியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி 2024 YR4 என்ற குறித்த விண்கல்லின் திசையில் திருப்பப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

விண்கல் நிலவை மோத 1.7 முதல் 2% வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

இந்த மோதல் மூலம் நிலவில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும், தூசி மணல் படலம் பரவும் என்றும“ கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *