நிலவில் ஏற்படவுள்ள பேரழிவு

ByEditor 2

Jun 19, 2025

விண்கற்களால் அவ்வளவு பெரிய டைனோர்சர்களே அழிந்து போனது. நாமெல்லாம் எம்மாத்திரம்? அப்படி ஒரு விண்கல்தான் சமீபத்தில் பூமியை நோக்கி வந்தது.

ஆனால், இது பூமியை தாக்காது என்று கூறிய விஞ்ஞானிகள், நிலவை தாக்குவதற்கான வாய்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக கூறியுள்ளனர். இது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த விண்கல்லின் பெயர் ‘2024 YR4’. ‘சிட்டி கில்லர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த விண்கல், கடந்த ஆண்டு இறுதியில்தான் நம் கண்ணில் சிக்கியது.

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.அதாவது, இக்கல் நிச்சயம் பூமியையோ அல்லது நிலவையோ தாக்கும். எனவே இருக்கிற எல்லா தொலைநோக்கிகளையும் இக்கல் பக்கமாக திருப்பி ஆய்வை தீவிரப்படுத்தினர். இதில் ஒரு ஆறுதலான செய்தி கிடைத்தது. அதாவது, விண்கல் இப்போதைக்கு பூமியை தாக்காது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வின்போது அவர்கள் இரண்டு விஷயங்களை கண்டுபிடித்தனர். ஒன்று, ‘சிட்டி கில்லர்’ பயணிக்கும் பாதை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது. எனவே, நிலவை தாக்கவதற்கு வாய்ப்பு இல்லை என்று கணித்தனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, இக்கல் நிச்சியம் நிலவை தாக்கும் என்று உறுதி செய்தனர்.

அந்த இரண்டாவது விஷயம். ஆனால் இந்த கல் தாக்குதவதால் பூமிக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பாடு என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 2028ம் ஆண்டு மீண்டும் ‘சிட்டி கில்லர்’ சூரியனை நோக்கி வரும். அப்படி வரும்போது இதை பற்றி இன்னும் அதிகம் தெரிந்துக்கொள்ள முடியும். 2032ம் ஆண்டு இக்கல் நிலவை தாக்கும். சுமார் 10 மாடி கட்டிடத்தின் சைஸ் கொண்ட இந்த ‘சிட்டி கில்லர்’ நமக்கான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *