முதலில் வந்தது கோழியா? முட்டையா?

ByEditor 2

Mar 22, 2025

காலம் காலமாக விடையாத ஒரு கேள்வியான முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

கோழியா? முட்டையா?

பெரும்பாலான மனிதர்களிடையே எழுந்திருக்கும் கேள்வி என்னவெனில், கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? என்பது தான்.

இந்த கேள்வியினை பலரும் கேட்டு வருவதுடன், எதிரே உள்ளவர்கள் கூறும் பதிலுக்கு எதிராக கேட்டு வாயடைக்க வைத்துவிடுவார்கள்.

முட்டை தான் என்றால் கோழி போடாமல் முட்டை எப்படி வந்திருக்கும் என்றும், கோழி தான் என்றால் முட்டை இல்லாமல் கோழி வந்தது என்று தான் மடக்குவார்கள்.

முதலில் வந்தது கோழியா? முட்டையா? புதிருக்கு கிடைத்த விடை | Chicken The Egg Which Came First Scientists Answer

உண்மை என்ன?

இந்நிலையில் குறித்த கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களின் குழு தனது ஆராய்ச்சியின் மூலம் உண்மையைக் கண்டுபிடித்துள்ளதாம்.

இங்கிலாந்து ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கோழி முட்டையில் ஓடு உருவாக Ovocleidin 17(OC 17) என்ற புரதம் முக்கியத் தேவையாக உள்ளது.

முதலில் வந்தது கோழியா? முட்டையா? புதிருக்கு கிடைத்த விடை | Chicken The Egg Which Came First Scientists Answer

இந்த புரதம் கோழியின் கருப்பையில் மட்டுமே உள்ளது. அதனால் ஒரு முட்டை உருவாக அது ஒரு கோழியின் கருப்பைக்குள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது நிரூபணமாகியுள்ளது.

இதனால், முதலில் வந்தது கோழிதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *