-மாபோலை, பெப்ரவரி 25, 2025-
அல்-அஷ்ரப் மகா வித்தியாலய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு இர்ஷாத் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அணிகளுக்கிடையே கடுமையான போட்டியினை உருவாக்கிய இந்நிகழ்வு, மாணவர்களின் ஒற்றுமை மற்றும் விளையாட்டு ஆற்றலை வளர்க்க முக்கிய பங்கு வகித்தது.
இவ் விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை ஏற்பாட்டுக் குழுவினர்களான பாடசாலை அதிபர் தலைமையிலான ஆசிரியர் குழாம் ,பாடசாலை அபிவிருத்தி நிர்வாக சபை, பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை பழைய மாணவிகள் சங்கம் உள்ளிட்டோர் அறிவித்ததுடன், மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேலும் ஊக்குவிக்க இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்கள்.
மாணவர்களின் உற்சாகம், முயற்சி மற்றும் அணிப் பந்தம் வெளிப்பட்ட இந்நிகழ்வு அனைவரின் மனதிலும் இனிமையாக நிறைவுற்றது என பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் S .D .M பாஹிம் தெரிவித்தார்.






