யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.

கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் நுவரெலியாவில் அமைந்துள்ள municipal council indoor stadiumஇல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வடமராட்சி கிழக்கின் மாணவர்கள் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனையை பெற்று, வடமராட்சி கிழக்கு பள்ளிகளில் முதன்முறையாக சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.