2025 தாய்லாந்து சர்வதேச தாய் தற்காப்புக் கலை விளையாட்டு போட்டியில் (Thailand International Thai Martial Arts Games 2025), 63.5 கிலோ கிக் பாக்ஸிங் பிரிவில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 10ஆம் வகுப்பு மாணவர் மாஸ்டர் எம்.ஐ.எம். இமான் வெள்ளிப் பதக்கம் வென்று, கல்லூரிக்கும் நாடுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பல நாடுகளைச் சேர்ந்த சிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு சாதனை படைத்த இமான், தன் தன்னம்பிக்கையும் கடுமையான பயிற்சியும் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இமானின் வெற்றிக்கு கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இமான் போன்ற மாணவர்கள் வழிகாட்டி உழைத்தால், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் எட்ட முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





