அநுராதபுரம் – மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரதன்கல்ல கறடிக்குளம பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்கள் அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புத்தர் சிலை ஒன்றையும் நீல நிற மாணிக்க கற்கள் சிலவற்றையும் அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23,26,30,47 மற்றும் 53 வயதுடைய மிஹிந்தலை,பொலன்னறுவை மற்றும் கண்டி கலகெதர,ஹாரிஸ்பத்துவ பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.