45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்?

ByEditor 2

Feb 15, 2025

ன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சர்க்கரை எடுத்துக் கொள்ளாத வாழ்க்கைக்கு நகர்ந்து வருகின்றனர். சர்க்கரை எடுத்துக் கொண்டால் பார்வை கூர்மையாகும், சருமம் பளபளப்பாகும், எடையும் என்று கூறப்படுகின்றது.

ஆனால் நீங்கள் 45 நாட்கள் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாவிட்டால் இரத்த அழுத்தம் சீராவதுடன், கொழுப்பு குறைவதாகவும் கூறப்படுகின்றது. இவற்றின் முழுமையான தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்? | 45 Days No Sugar Challenge Benefits

எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்?

நாள் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் (10கிராம்) சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.

தற்போது சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் அதிகமாகி வருவதால் சர்க்கரை சேர்க்காமல் வாழ மக்கள் வழிகாட்டப்படுகிறார்கள்.

ஆனால் சர்க்கரையை மட்டும் குறைப்பதால் எல்லா நன்மைகளும் கிடைத்துவிடும் என்று கூற முடியாது. அரிசி, சப்பாத்தி போன்ற உணவு சர்க்கரையாக செயல்படுகின்றது. நல்ல உணவுப்பழக்கம், உடற்பயிற்சியை கடைபிடிக்க வேண்டும்.

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்? | 45 Days No Sugar Challenge Benefits

சர்க்கரையை எடுத்துக் கொள்ளாவிட்டால்?

நமது அன்றாட வாழ்க்கையில் அதிக தாக்கத்தை சில உணவுப்பொருட்கள் ஏற்படுத்துகின்றது. இதில் சர்க்கரையும் ஒன்றாகும். சர்க்கரை கலந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பதில் சிக்கல் ஏற்படும்.

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்? | 45 Days No Sugar Challenge Benefits

அதிக தேநீர், காபி பழக்கம் உங்களுடைய உடல் நலத்திற்கு மறைமுகமாக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே அளவாக உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு நாளுக்கு இரண்டு வேளைக்கு மேலாக காபியோ தேநீரோ அருந்துவதை வழக்கப்படுத்தாதீர்கள். இனிப்பு பண்டங்களை மதியம் உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரவிலோ காலையிலோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்? | 45 Days No Sugar Challenge Benefits

காலையில் கார்போஹைட்ரேட் உணவுகளான கிழங்கு வகைகள், அரிசி உணவுகள் தவிர்த்து ஆவியில் வேக வைத்த இட்லி மற்றும் சாம்பார் வைத்து சாப்பிடலாம்.

இரவில் 8 மணிக்கு முன்பாக சாப்பிட வேண்டும். அதாவது படுக்கைக்கு செல்லும் 3 மணிநேரத்திற்கு முன்பு சாப்பிடுவது நல்லதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *