ரூபாய் நோட்டுகளால் சளி பிடிக்குமா? 

ByEditor 2

Jan 28, 2025

தக்காளி, வெங்காயம் மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது சளி பிடிக்கிறது என பலரும் பேசிக் கேட்டிருப்போம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் ரூபாய் நோட்டு மூலம் சளி பிடிக்குமா? என்பதற்கு மருத்துவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து வெளியான காணொளியில், “ தக்காளி, வெங்காயம் மற்றும் ஆரஞ்சு பழ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது சளி தொல்லை இருக்கும் என பலமுறை விளக்கமாக கூறியிருக்கிறேன்.

சளி என்றாலே வைரஸ்களால் ஏற்படுமே தவிர நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து வருவது குறைவு. சிலருக்கு சில உணவுகள் சாப்பிட்ட பின்னர் மூக்கில் இருந்து தண்ணீர் வடியும், தொண்டை பகுதியில் அரிப்பு இருக்கும் உள்ளிட்ட அறிகுறிகள் சளி பிடித்து விட்டது என்பதற்கான அறிகுறிகள் அல்ல, மாறாக அவைகளும் ஒரு வகையான ஒவ்வாமையாகும்.

உணவினால் வரக்கூடியது உணவு ஒவ்வாமை தான் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகிய பிரச்சினைகளுக்கு காரணமாக அமைக்கிறது.

ரூபாய் நோட்டுக்களால் சளி பிடிக்குமா?

சாதாரணமாகவே சளி பிடிக்கிறது என்றால் நாம் நமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்பதே உண்மை. கைக்குட்டை வைத்து மூக்கை சிந்திக் கொண்டிருக்கிறோம்.

அதே கைகளில் மற்றவர்களுக்கு எல்லா பொருட்களையும் எடுத்துக் கொடுக்கிறோம். இப்படியான செயல்பாடுகள் காரணமாக நம்முடைய கைகளில் இருந்து கிருமிகள் பரவுகின்றன.

சாதாரணமாக மக்கள் கையில் இருந்து பரிமாற்றப்படும் ரூபாய் நோட்டுக்கள் கூட இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைக்கிறது. சளியை ஏற்படுத்தும் வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலமும் பரவலாம்.

மேலும், நாம் கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர்பானங்களால் ஏன் சளி பிடிக்கிறது? என பலரும் சிந்தித்திருப்போம்.

அப்படியாயின், நாம் சில்லென வாங்கி குடிக்கும் குளிர் பானங்களில் கலக்கப்படும் சர்க்கரை, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தான் காய்ச்சல் வருவது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்…” என மருத்துவர் விளக்கியுள்ளார்.      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *