சம்பவம் 1
நான் நர்ஸாக வேலை செய்கிறேன் என்ற காரணத்துக்காக என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தான், அந்த அழகான வாலிபன்.
பிறகு ஒருநாள் நோய்வாய்ப்பட்டு வந்த அவனது மகனை மரணத்திலிருந்து நான் தான் காப்பாற்றினேன்.
சம்பவம் 2
நான் டிரைவராக வேலை பார்த்ததால் என்னை திருமணம் செய்ய மறுத்தாள், படித்துப் பட்டம் பெற்ற அந்தப் பெண்.
பின்னர் ஒரு நாள் ஒரு சாலை விபத்தில் சிக்கிய அவளது கணவனை நான் தான் காப்பாற்றினேன்.
சம்பவம் 3
நான் பத்திரிக்கையாளரான பணி செய்கிறேன் என்பதால் என்னை திருமணம் செய்ய முடியாது என்றார் அந்த மருத்துவர்.
பின்னர் அவர் கண்டுபிடித்த புற்றுநோய் மருந்தை நான் தான் பத்திரிகையில் வெளியிட்டேன்.
சம்பவம் 4
நான் கறுப்பாக இருப்பதாலும், அப்பா கருப்பாக இருந்தால் குழந்தைகளும் கருப்பாக வரும் என்பதால் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கேலி செய்தாள், அந்த அழகான யுவதி
ஆனால் பத்து வருடங்கள் கடந்தும் இன்னும் அவளுக்கு பிள்ளைப் பாக்கியம் இல்லை.
சம்பவம் 5
எனக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் பெண் குழந்தைகள் என என்னை கேலி செய்து கொண்டிருந்தாள், என் பக்கத்து வீட்டுப் பெண்.
பின்னர் அவளுக்கிருந்த ஒரே ஒரு மகனும் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் இறந்து போனான்.
சம்பவம் 6
என் காலில் இருந்த முடக்க வாதத்தை கேலி செய்து கொண்டிருந்தான் அந்த மள்ளிகை கடைக்காரர்.
பின்னர் அவரை பீடித்த சக்கரை வியாதி காரணமாக அவரது பாதம் துண்டிக்கப்பட்டது.