உணவுகளை குக்கரில் சமைக்கிறீர்களா?

ByEditor 2

Jan 19, 2025

குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள் குறித்தும், ஏன் சமைக்கக்கூடாது என்பதைக் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் மக்கள் பயங்கர பிஸியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வேலைகள், சமையல் வேலைகளை சுலபமாக செய்து முடிக்கவே நினைக்கின்றனர். 

அதிலும் சமையல் வேலை என்றால், எந்த காய்கறி, பருப்பு இவற்றினை வேக வைக்க வேண்டும் என்றால் உடனே குக்கரில் வைத்து விரைவில் சமைத்து விடுகின்றனர்.

இதனால் நேரம் மிச்சமாவதுடன், சுலபமாகவும் மாறிவிடுகின்றது. ஆனால் நாம் சில உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள்

பால் பொருட்களை குக்கரில் சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதுடன், அதன் சுவையும் மாறிவிடும். சில தருணங்களில் கெட்டுப் போகவும் செய்கின்றது.

கீரை ப்ராக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை குக்கரில் சமைக்கக்கூடாது. ஏனெனில் இதன் சுவை மாறிவிடுவதுடன், அவற்றின் சத்துக்களையும் இழக்க நேரிடும்.

பாஸ்தா போன்ற பொருட்களை குக்கரில் சமைக்கக்கூடாது. ஏனெனில் சமைக்கும் போது தண்ணீர் விரைவாக உறிஞ்சப்பட்டு ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்.

வெள்ளரிக்காய், குடை மிளகாய் போன்ற மென்மையான காய்கறிகளை குக்கரில் சமைக்க வேண்டாம். சீக்கிரமாகவே வெந்துவிடுவதுடன், அவற்றின் சுவையும் மாறிவிடும்.

பார்லி, குயினோவா போன்ற தானியங்களை குக்கரில் சமைத்தால் அவை மிருதுவாகி அவற்றின் தன்மையை இழந்துவிடும். எனவே அவற்றினை குக்கரில் சமைக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *