சேரியன் அறுவை சிகிசையில் மாத்திரம் தான் கர்ப்பிணித் தாயின் உடலில் ஐந்து திசுக்கள் கிழித்துத் திறக்கப்படும் ஒரே ஒரு அறுவை சிகிச்சை ஆகும்.
இதன் விளைவாக அவளது பாலூட்டி சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பைச் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
வயிற்றின் கடைசி திசுவை ரேஸரால் கிழிக்கப்படுவதில்லை. மாறாக மருத்துவர்கள் தங்கள் கைகளால் அகற்றுவார்கள். காரணம் சிசுவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக.
சிசேரியனுக்காக தாயின் முதுகில் குத்தப்படும் மயக்க ஊசியின் விளைவாக பாதி உடம்பு உணர்ச்சியற்று விடுகிறது.
அந்த மயக்க ஊசியின் விளைவாக தாய் தனது வாழ்நாள் முழுவதும் முதுகு வலியையும் இதர வேதனைகளையும் விலையாக வாங்கிக் கொள்கிறாள்.
அறுவை சிகிச்சையின் போது நடக்கும் சிறு தவறால் கூட தாய் இறக்க நேரிடலாம். அல்லது இரத்தப் போக்கை நிறுத்த கருப்பையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இவ்வளவு ஆபத்துக்கள் இருந்தும் தாய் தன் சேயின் அழுகைக் குரலை கேட்டவுடன் வலிகள் எல்லாம் மறைந்த ஆனந்தப் பெருவெள்ளத்தில் மிதந்துவிடுவாள்.
நீங்கள் சிசேரியன் தாயாக இருந்தால், நீங்கள் நினைப்பதைவிட நீங்கள் பலசாலியான தாய் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தாய்மார்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.