தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும் குடிப்பது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சிறப்பாய் அமைகிறது.
இந்த தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ மற்றும் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. குறிப்பாக உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இந்த பதிவில் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மைகள்
கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளலாம்.தேங்காய் பாலில் டிரைகிளசரஒட் மற்றும் காப்ரிக் , காப்ரிலிக் ஆசிட் இருப்பதால் அவை கொழுப்பு சேருவதை தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
இது இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இன்சுலின் சுரப்பையும் சீராக வைத்திருக்கும்.
வயிற்றில் புண், வடு, வயிறு கோளாறு, செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தால் தேங்காய் பால் குடிப்பதால் சரியாகும்.
