பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
இதன்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். ஏனெனின் சர்க்கரை நோயாளர்கள் உணவில் கட்டுபாடுடன் இல்லாவிட்டால் அவர்களின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாக இன்சுலின் செடி பார்க்கப்படுகின்றது. இந்த செடியின் இலைகளை மென்று சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறையும் என பலரும் கூறியிருப்பார்கள்.
அப்படி என்ன இந்த இலைகளில் உள்ளது? இதனால் கிடைக்கும் வேறு பலன்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

இன்சுலின் செடியின் பலன்கள்
இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் காணப்படும் செடி தான் இன்சுலின் செடி. இதனை பலர் “நீரிழிவு செடி” என அழைக்கிறார்கள்.
இதன் அறிவியல் பெயர் Costus igneous. இந்த செடியை நீரிழிவு நோயாளர்கள் அடிக்கடி சாப்பிடுவார்கள். உடலில் உள்ள இன்சுலின் சுரப்பிகளை இவை கட்டுக்குள் வைக்கின்றன. இந்த இலைகளை உலர்த்தி பொடியாக்கி தினமும் மருந்துகளுக்கு பதிலாக சாப்பிடலாம். உடனே நிவாரணம் கொடுக்கும். அத்துடன் பெரிதாக பக்க விளைவுகளும் இல்லை.
இன்சுலின் செடியை சாப்பிடும் ஒருவருக்கு உடலின் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகள் ஏற்படும். அத்துடன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும் உள்ளன. இது உடலை தொற்று மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.