இலங்கை வெற்றி இலக்கு: 187

ByEditor 2

Dec 30, 2024

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

Mount Maunganuiயில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் Mark Chapman அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் Tim Robinson மற்றும் Mitchell Hay ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 02 விக்கெட்டுக்களையும், Nuwan Thushara, Matheesha Pathirana ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *