சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் 11.45 மணிக்கு Mount Maunganuiயில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் கணக்கில் முன்னிலையில் உள்ளது.