இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சகல துறை ஆட்ட வீராங்கனையான தீப்தி சர்மா (Deepti Sharma) பந்துவீச்சில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தீப்தி சர்மா ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஒரே போட்டியில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதற்கு முன் 2016 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக 20 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை அவர் வீழ்த்தி இருந்தார்.
இந்தநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை அவர் நேற்று வீழத்தியுள்ளார்.
இதன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அத்துடன் உலக அளவில் இந்த சாதனையை செய்த இரண்டாவது பந்து வீச்சாளர் ஆகவும் அவர் பதிவாகியுள்ளார்.
ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் சேன் லூயிஸ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். எனவே இந்தத சாதனையை தீப்தி சர்மா சமன் செய்துள்ளார்.