வெறும் வயிற்றில் வெந்தய நீர்

ByEditor 2

Dec 28, 2024

பொதுவாக அனைவரது வீடுகளிலும் வெந்தயம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் அவர்களின் உணவில் வெந்தயம் அவசியம் சேர்ப்பார்கள்.

இதற்கான முக்கியம் காரணம் என்னவென்றால், வெந்தயத்தில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன.

இதன்படி, வெந்தயத்தில் புரதம், ஆற்றல், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் சி, வைட்டமின் பி, சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியன உள்ளன.

இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தய நீரை தினமும் காலையில் குடிப்பதால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

அந்த வகையில், வெந்தயம் நீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

 வெந்தயம் நீர்

1. வெந்தய நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். அத்துடன் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும்.

2. வெந்தய நீர் செரிமான அமைப்பை வலுப்படுத்தும் நிவாரணியாக பார்க்கப்படுகின்றது. இது வயிற்றில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்வதுடன் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் கட்டுக்குள் வைக்கிறது. இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து வெந்தயம் நீர் குடிக்கலாம்.

3. சிலர் எடையை எப்படி குறைக்கலாம் என பல முயற்சிகள் செய்து கொண்டிருப்பார்கள். அப்படியானவர்கள் வெறும் வயிற்றில் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் கலந்து தண்ணீர் குடிக்கலாம். இது உடல் பருமனை விரைவாக குறைக்கும்.

வெந்தய நீர் தயாரிப்பது எப்படி?

  • வெந்தய விதை நீர் மனித உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்களிப்பு செய்கிறது.
  • அதிலும் குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது வெந்தயம் குடிப்பது என்றால் அந்த விதைகளை இரவு ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் எழுந்தவுடன் வெந்தய தண்ணீரை நன்றாக வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  • விரும்பினால் நீருடன் வெந்தய விதைகளையும் சாப்பிடலாம்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *