அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கு இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதிபெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை, நாளைய தினம் (27) உரிய வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.