ஆரம்பம மின்கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகள் நாளை(27) முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய மாகாணத்தின் பொதுமக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகள் கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கான பொதுமக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகள், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.