வீடுகளில் கப்களில் தேநீர் குடிப்போம். ஆனால், எங்காவது பயணம் செல்கையில் தேநீர் குடிக்க வேண்டும் என்று இருக்கும்.அவ்வாறான சந்தரப்பங்களில் பெரும்பாலும் பேப்பர் கப்களில் தேநீர் குடிப்போம்.ஆனால், இந்த பேப்பர் கப்பில் குடிக்கப்படும் தேநீரினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என கூறப்படுகிறது.நுண் துளைகளால் உருவாக்கப்பட்டதே பேப்பர் கப்.
இவ் வகை பேப்பர் கப்களில் சுமார் 15 நிமிடத்துக்கு மேல் சூடான திரவம் இருப்பின் அதிகமான நுண் மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் திரவத்தில் கலந்துவிடும் என்று கூறப்படுகிறது.15 நிமிடத்துக்கு அதிகமாக 100ml சூடான திரவம் ப்ளாஸ்டிக் கப்பில் இருப்பின் அதில் 25,000 மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் கலக்கும்.எனவே ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் பேப்பர் கப்பில் தேநீர் குடித்தால் அது காலப்போக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும்.