தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்தது!!!!!!

Byadmin

Dec 2, 2024

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், மக்கள் அதிகமாக உட்கொள்ளும் நாட்டரிசி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அத்துடன், சில்லறை அரிசி விற்பனைக்காக அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அரிசியின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை திருத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபா விசேட வர்த்தக வரியை 10 ரூபாவாக குறைப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான 60 ரூபா விசேட வர்த்தக வரியை தொடர்ந்தும் பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வானிலை மற்றும் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து இதன் விலை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த புதிய வரி திருத்தம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *