மொபைலை எத்தனை முறை சார்ஜ் செய்யலாம்? 

ByEditor 2

Dec 23, 2024

ஸ்மார்ட்போன் பேட்டரியை ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஸ்மார்ட்போன்

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பவர்கள் என்பது மிக மிக குறைவாகவே இருக்கின்றனர்.

அந்த அளவிற்கு ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் போனில் அடிக்கடி சார்ஜ் இல்லாமல் போகும் பிரச்சனை ஏற்படும்.

அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டுவிட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும்.

ஆம் ஸ்மார்ட் போனை நாம் சார்ஜ் செய்யும் விதத்தினை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் சில தவறுகளை தவிர்த்தால் மட்டுமே ஸ்மார்ட்போனின் பேட்டரியின் ஆயுள் அதிகரிக்கும்.

எவ்வாறு சார்ஜ் செய்வது?

20% பேட்டரி இருக்கும் போது சார்ஜ் செய்யத் தொடங்கி 80% ஐ அடைந்ததும் நிறுத்துவது நல்லது. 45-75 விதிமுறையைப் பின்பற்றுவதும் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும்.

தேவையான நேரத்திற்கு சார்ஜ் போடுவது என்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் காலப்போக்கில் பேட்டரியின் ஆயுள் குறைந்துவிடும். 

தேவையெனில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் சார்ஜ் செய்வது சிறந்த அணுகுமுறையாகும். பலமுறை சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *