பொதுவாக தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பம் காரணமாக நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே வருகின்றது.
நெக் பேண்ட், இயர்பாட்கள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இயர்பாட்கள்(EarPods), கழுத்துப்பட்டைகள் (Neck Band)ஒரே ஒலியை உருவாக்குகின்றன.
அவை காதுகளுக்கு உள்ளே இருக்கும் செவிப்பறைக்கு மிக அருகில் ஒலிக்கின்றன. அத்துடன் ஹெட்ஃபோன்கள் அல்லது இயர்போன்கள் போன்ற கருவிகளும் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்திக் கூடியன.

நெக் பேண்ட், இயர்பாட் பயன்படுத்தும் போது இயர்பீஸ் உள் காதில் செருகப்பட்டுள்ளது. இது காதுக்குள் அழுக்குகளை ஆழமாக செலுத்தி, கேட்கும் திறனில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வளவு ஆபத்துக்களை தன்வசம் வைத்திருக்கும் Headset வகைகளை நாள் முழுவதும் காதுகளில் மாட்டியிருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Headset பாவணையின் பாதிப்புக்கள்
EarPods, நெக்பேண்ட் புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டால் காதுகளுக்கு பிரச்சினைகள் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
காதுகளின் பாதுகாப்பு குறித்து எந்தவிதமான தற்காப்பு வசதிகளும் மேற்குறிப்பிட்ட சாதனங்களில் இல்லை. இந்த சாதனங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் ஒருவருக்கு காலப்போக்கில் காது கேளாமை அபாயம் ஏற்படும் அல்லது கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடையும்.

நெக் பேண்ட், இயர்பாட்களை பயன்படுத்தும் போது பாதிப்புகளை குறைப்பதற்கு ஒரு வழி மாத்திரமே உள்ளது. குறைந்த அளவு சத்தம் வைத்து பயன்படுத்தலாம்.
இப்படி செய்தால் கேட்கும் திறனில் மாற்றங்கள் மிகக் குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.