காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

ByEditor 2

Dec 19, 2024

உணவு என்பது மனிதனின் அத்தியாவசியமான ஒன்றாகும். நேரத்திற்கு நேரம் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

அந்த வகையில் உடல் எடை குறைப்பவர்கள் உணவு எடுத்து கொள்வதில் பெரும் அவஸ்தை படுவார்கள். நாம் எந்த வேளை உணவை தாமதித்தாலும் காலை உணவை ஒரு போதும் தாமதிக்கவும் கூடாது எடுக்காமல் விடவும் கூடாது.

இது பல பிரச்சனைகளை உடலில் கொண்டு வந்து சேர்க்கும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான தீங்கு விளைவிக்கும். காலை உணவை தவிர்ப்பதால் ஆரோக்கியத்திற்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

காலை உணவு

காலை உணவை நாம் தவிர்க்கும் போது அது பல ஊட்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் சர்க்கரை நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும். இதன் காரணதாக உடல் எடை அதிகரிக்கும்.

காலையில் உணவை வழமை நெரத் ஒன்றை வைத்து அதில் சரியாக ஒவ்வொரு நாளும் எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு குளுகோஸ் கிடைக்காது.

இந்த காரணத்தால் ரத்த சர்க்கரை அளவு சரியாக பராமரிக்கப்படாது.இதனால் ரத்த சக்கரை அளவு குறைந்தால் மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும். அதிகளவு மன அழுத்த ஹார்மோனால் உங்களது மனநிலை மிகவும் மோசமடையும்.

இதனால் நீங்கள் எரிச்சலாக உணர்வீர்கள். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக கோபப்படலாம் ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. காலை உணவு தவிர்ப்பு உடலில் ஊட்டச்சத்து குறைபாட்மை உண்டாக்கும்.

இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு மண்டலமும் பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதை தவிர நீரழிவு நோய் வரவும் இது ஒரு காரணியாக அமைகிறது. எனவே காலை உணவை மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *