பொதுவாகவே தற்காலதத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக எந்தளவுக்கு சாதக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதோ அதே அளவுக்கு ஆரோக்கிய பிரச்சினைகளும் ஆபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தற்காலத்தில் கருவுறுதல் திறனில் ஏற்படும் குறைபாடு என்பது உலகெங்கிலும் உள்ள பல தம்பதிகளுக்கு கவலையளிக்கும் பிரச்சினையாக மாறிவருகிறது.

பெரும்பாலும் கலுவுருதல் பிரச்சினை என்றாலே பெண்களில் தான் குறைபாடு இருக்கின்றது என்ற கருத்து தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கின்றது.
ஆனால் ஆண்களிலும் இந்த குறைப்பாடு இருக்கலாம். அவற்றின் அறிகுறிகள் சற்று ஆழமாக கவனித்தால் மட்டுமே தெரியவரும்.
ஆண்மை குறைப்பாடு என்றால் என்ன?
ஒரு ஆணின் இனப்பெருக்க ஆரோக்கியம், அவனது பெண் துணையின் கர்ப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் மனைவி விரைவில் கர்ப்பம் தரிப்பது அவனது விந்தணுவின் தரம் மற்றும் அளவு என்பற்றிலேயே தங்கியிருக்கின்றது.
ஆண் சரியான அளவில் விந்தணு உற்பத்தி நடக்கவில்லை என்றாலோ, அல்லது விந்தணு தரமற்றதாக இருந்தாலோ, ஆணுக்கு அப்பாவாகும் பாக்கியம் கிடைப்து தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். அதுவே ஆண்மை குறைப்பாடாகும்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பாதுகாப்பற்ற உடலுறவு முயற்சி செய்த பிறகும் பெண் கருத்தரிக்கவில்லை என்றால், நீங்கள் சிறுநீரக மருத்துவர் அல்லது மலட்டுத்தன்மை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
பெண்களை போன்றே ஆண்களும் மலட்டு தன்மை பிரச்சினையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதன் அறிகுறிகள் தொடர்பில் சரியான விழிப்புணர்வு இருப்பதில்லை.

ஆண்கள் மலட்டு தன்மை உடையவர்கள் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகளை தொடர்பிலும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிகுறிகள்
ஆண்கள் பெரும்பாலானோருக்கும் நடக்கும் மிகச்சாதாரணமான சில விடயங்கள் கூட ஆண்மைக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக எப்போதும் ஒருவருடைய ஆணுறுப்பின் அளவு சிறியதாக இருந்தால் அவர்களுக்கு ஆண்மை குறைப்பாடு இருக்கும் என்று அர்த்தமல்ல.

ஆனால் உடலுறவு சமயத்தில் ஏற்படும் விறைப்புக் கோளாறுகள் ஆண்மைக் குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும்.
உடலுறவில் ஈடுபட்ட ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே அதாவது விந்து வெளியேற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் ஆணுறுப்பு சுருங்கி விடுவது ஆண்மை குறைப்பாட்டின் முக்கிய அறிகுறியாக அறியப்படுகின்றது.

விந்து முந்துதல் பிரச்சினை பல பேருக்கு இருக்கிறது. சில ஆண்களுக்கு உடலுறவு சமயத்தில் போதிய நேரத்திற்கும் குறைவாகவே மிக வேகமாக விந்தணு வெளியேறி விடும்.இதுவும் ஆண்மை குறைப்பாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
அது போல் உடலுறவின் போது மிக மிகக் குறைவான அளவில் விந்து வெளியேறுவதும் கூட ஆண்மைக் குறைபாட்டின் அறிகுறியாகும்.

விந்து வெளியேறுவதன் சராசரி அளவு என்பது ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் வரை இருக்க வேண்டும். இதுதான் ஆண்களுக்கு விந்து வெளியேற்றத்தின் சராசரி அளவு அதைவிட குறைவாக இருப்பது ஆண்மை குறைப்பாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
உடலுறவின் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் அதற்கு பின்னர் உடல் வலி, சோர்வு, அலுப்பு ஆகியவை உண்டாவது வழக்கம் ஆனால் இது அடுத்த நாள் வரையில் சோர்வை ஏற்படுத்தினால் ஆண்மை குறைப்பாடாக இருக்ககூடும்.

குறிப்பாக இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி அதிகமாக இருக்கும். உடல் உறவின்போது உண்டாகும் உடல் வலி நாள் கணக்கில் நீடித்திருப்பது ஆண்மை குறைப்பாட்டின் மிக முக்கிய அறிகுறியாகும்.
வெளியேறும் விந்துவின் அளவு குறைவாக இருப்பது மட்டுமன்றி எவ்வளவு அதிகமாக விந்து வெளியேறினாலும் அதில் உள்ள விந்தணுக்கள் (உயிரணுக்கள்) எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஆண்மை குறைப்பாட்டின் அறிகுறியாகவே நிபுணர்கள் கருதுகின்றார்கள்.

இது கருததரிப்பை பாதிக்கும். வீரியமற்ற உயிரணுக்கள் விந்துவில் உள்ள விந்தணுக்கள் கருவளத்தை மேம்படுத்துவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆண்மை குறைப்பாடு ஏற்பட என்ன காரணம்?
பல்வேறு தவறான வாழ்க்கை முறை தேர்வுகள் ஆண் கருவுறுதலை கணிசமாக பாதிக்கும் அவற்றுள் முக்கியமானவை,
புகைபிடித்தல்
அதிகப்படியான மது அருந்துதல்
போதைப்பொருள் பயன்பாடு
ஸ்டீராய்டு உட்கொள்ளல்
உடல் பருமன்
உடல் உழைப்பு இல்லாமை
இறுக்கமான ஆடைகளை அணிதல்
மன அழுத்தம்

மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் வெளிப்பாடு போன்ற முக்கிய காரணிகளால் ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது.
குழந்தை பேறு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரம் எனவே இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடநடியாக முறையான மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.