பொதுவாக மூலிகைகளை உணவாக சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக தூதுவளை பற்றி தெரிந்திருப்பார்கள்.
சித்த மருத்துவத்தில் தூதுவளை நெய் என்னும் சிறப்பு மருந்து உண்டு .இது சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
தூதுவளை உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவுகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2659675596&adf=2539919118&pi=t.aa~a.2732844415~i.9~rp.4&w=674&abgtt=11&fwrn=4&fwrnh=100&lmt=1733640933&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6192759585&ad_type=text_image&format=674×280&url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Fthuthuvalai-rasam-recipe-and-benefits-1733633048&fwr=0&pra=3&rh=169&rw=674&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTQuMC4wIiwieDg2IiwiIiwiMTMxLjAuMjkwMy43MCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJNaWNyb3NvZnQgRWRnZSIsIjEzMS4wLjI5MDMuNzAiXSxbIkNocm9taXVtIiwiMTMxLjAuNjc3OC44NiJdLFsiTm90X0EgQnJhbmQiLCIyNC4wLjAuMCJdXSwwXQ..&dt=1733640933170&bpp=2&bdt=1457&idt=2&shv=r20241120&mjsv=m202412030101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0924d5a50c4a436b%3AT%3D1732777710%3ART%3D1733640905%3AS%3DALNI_MbgrDKR_BGmW1FnPGw9v_IcHW1UBA&gpic=UID%3D00000f79644f175c%3AT%3D1732777710%3ART%3D1733640905%3AS%3DALNI_MbO42EkYPxVsG4u0L-T3c6ySrWe-g&eo_id_str=ID%3D67f3acf8957b80c2%3AT%3D1732777710%3ART%3D1733640905%3AS%3DAA-AfjYLlv8TKglTCE6brgsFU9Vy&prev_fmts=0x0&nras=2&correlator=3840878601224&frm=20&pv=1&u_tz=330&u_his=2&u_h=768&u_w=1366&u_ah=720&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=167&ady=724&biw=1343&bih=642&scr_x=0&scr_y=0&eid=31089331%2C95332927%2C95347445%2C95345967%2C95347433&oid=2&pvsid=1463726669718552&tmod=1878757733&wsm=1&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fmanithan.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C720%2C1358%2C642&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&dtd=424
தூதுவளை மருந்துகளோடு சேர்த்து எடுக்கும் போது நோய் தாக்கம் விரைவாக சரியாகிவிடும் என நம்புகிறார்கள்.
இவ்வளவு சிறப்புக்களை கொண்ட தூதுவளையில் எப்படி ரசம் செய்து குடிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தூதுவளை ரசம்

தேவையான பொருட்கள்
- தூதுவளை இலை- ஒரு கைப்பிடி
- பூண்டு- 5 முதல் 8 பற்கள்
- வரைபுளி – எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- வரமிளகாய் – 2
- மிளகு – 1 டீஸ்பூன்
- தனியா – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பெருங்காயம் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- கறிவேப்பிலை – தேவைக்கு
- கொத்துமல்லித்தழை – தேவைக்கு
- தாளிக்க கடுகு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
- தூதுவளை இலையின் பின்புறம் இருக்கும் முட்களை நீக்கிவிட்டு, உரலில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
- குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தூதுவளை இலையை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ளலாம். பின்னர், புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- இதனை தொடர்ந்து, சுத்தமான மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், தனியா, வரமிளகாய் ஒன்று மட்டும் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய் ஒன்று கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அதனுடன் இடித்து வைத்த தூதுவளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, புளிகரைசல், மஞ்சள் தூள் சேர்க்கவும், புளிக்கரைச்சல் கொதித்து வரும் போது அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து இறக்கவும்.
- கடைசியாக தேவை ஏற்பட்டால் கொத்துமல்லித்தழை தூவி இறக்கினால் காரசாரமான தூதுவளை ரசம் தயார்!
முக்கிய குறிப்பு
தூதுவளை ரசம் வாரத்திற்கு 3 தடவைகள் குடிக்கலாம்.