தொங்கும் தொப்பைக்கு ஒரே மாதத்தில் முடிவு கட்டணுமா?

ByEditor 2

Dec 8, 2024

பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இவ்வாறானவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், இளம் வயதிலேயே தொப்பை அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

அதனால் தொப்பை குறைக்க உடற்பயிற்சி செய்யவும் நேரமின்றி, விரைவில் தொப்பையை குறைக்க சந்தைகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முயற்சித்து நேரத்தையும், பணத்தையும் இழந்தது மட்டுமன்றி பல்வேறு பாதகமாக ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.

அதிக செலவின்றி ஒரே மாதத்தில் தொங்கும் தொப்பையை இருந்த இடம் தெரியாமல் கட்டுக்கோப்பாக மாற்றுவதற்கு பின்பற்றக்கூடிய எளிய வீட்டு வைத்தியங்கள் தொடர்பில் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

எலுமிச்சை தண்ணீர்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்பை கரைப்பதில் ஆற்றலுடன் செயற்படுகின்றது. 

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதால் விரைவில் தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும். 

புதினா தண்ணீர் 

தினா கலந்த தண்ணீர் செரிமான அமைப்பு சீராக இயங்குவதற்கு உதவுவதுடன் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைப்பதிலும் ஆற்றலுடன் செயற்படுகின்றது. 

மேலும் புதினா வாயு பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வு கொடுக்கின்றது. புதினாவில் உள்ள மெந்தோல் உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்வுடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

தண்ணீரில் புதினா இலைகளை போட்டு கடுப்பதால் விரைவில் தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். புதினா டீயும் தயார் செய்து பருகலாம். 

இலவங்கப்பட்டை தண்ணீர்

இலவங்கப்பட்டையில்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிந்து காணப்படுகின்றது. அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

பட்டை கலோரிகளை வேகமாக எரிப்பதிலும் ஆற்றலுடன்  செயற்படுவதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாக இருக்கின்றது. 

உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை வேகமாக எரிக்கிறது.

இலவங்கப்பட்டை கலந்த தண்ணீரை குடிப்பது தொப்பை பிரச்சினைக்கு மிக விரைவில் சிறந்த பலனை கொடுக்கும். 

மஞ்சள் தண்ணீர்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் பெரிதும் உதவுகின்றது. 

இவை இடுப்பு கொழுப்பு மற்றும் தொப்பை கொழுப்பை கரைப்பதில் ஆற்றலுடன் செயற்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *