
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயலுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய தாழமுக்க புயலாக இந்த பெங்கால் புயலை கூறலாம். கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கைய அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.பொதுவாகவே கடந்த 23ஆம் திகதி தாழமுக்கம் தோற்றம் பெற்றதில் இருந்து மீனவர்களை தொடர்ச்சியாக கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எதிர்வரும் முப்பதாம் திகதி வரைக்கும் அவர்கள் இந்த நிலைமையை பின்பற்ற வேண்டும். எதிர்வரும் முப்பதாம் திகதிக்கு பிறகு நாட்டிலும் சரி அல்லது கடற்பகுதியிலும் சரி நிலைமை சீராக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதனால், எதிர்வரும் முப்பதாம் திகதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றார்.