யாழ் போதனா வைத்தியசாலை
அனர்த்த கால சேவை
பொதுமக்களின் கவனத்திற்கு‼️‼️‼️
வெள்ளப்பெருக்கம் காரணமாக வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும்.
எனவே, பொதுமக்கள் கிளினிக் போன்ற சாதாரண சிகிச்சைகளுக்காக வருகை தராமல், வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு அவற்றுக்கான மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும்,
அத்தியாவசிய சிகிச்சைகளுக்காக மட்டுமே வருகை தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
யாழ் போதனா வைத்தியசாலை



