
தற்போதைய நிலையில் தாழ்வு மண்டலமாகவே திருகோணமலைக்கு கிழக்காக 250 கிமீ என்ற தொலைவில் சென்று சுழல்கிறது. காற்றின் திசை சரியாக வடக்கிலிருந்து தெற்காக காணப்படுவதால் வட இந்தியாவின் நீராவி அற்ற வறண்ட பனிக்காற்று தற்போது யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலப்பரப்பு வழியாக தாழ்வு மண்டலத்தை நோக்கி செல்கிறது.
இதன்விளைவாக இன்று பகல் அதிக குளிரான காலநிலை நிலவுவதோடு, காற்று மாசு விகிதமும் சற்று அதிகரித்து காணப்படும். அத்துடன் காற்றின் வேகம் ஆக்கூடியது மணிக்கு 50kmph என்ற நிலையில் காணப்படும். (புயலாக வலுவடையவில்லை)
மேலதிகமாக இது மீண்டும் நாளை யாழ்ப்பாணத்தை அண்மித்து வந்து தமிழகத்தின் டெல்டாவில் கரையை கடப்பதுபோன்ற தரவுகளை Models காட்டினாலும் தற்போதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.