தனுஷ் விவகாரத்தில் ஷாக் கொடுத்த நடிகை பார்வதி!

ByEditor 2

Nov 25, 2024

கோலிவுட்டில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது தனுஷ் – நயன் தாரா பற்றித்தான். ஓம் நமச்சிவாயா என்று சொல்லிக்கொண்டு போலி முகமூடியை தனுஷ் போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றி வருவதாக நயன் தாரா 3 பக்கம் கொண்ட அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆவணப்படம் சம்பந்தமான விவகாரத்தில் தனுஷ் 10 கோடி கேட்டு புகாரளித்ததற்கு நயன்தாராவுக்கு தனுஷுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகைகளே ஆதரவு கொடுத்தனர். அதில் மரியான் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகை பார்வதியும் நயன் தாரா பதிவுக்கு ஆதரவு அளித்தார்.

சமீபத்தில், லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன் தாரா சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பெரும் போராட்டம் நடத்தி, தானே உருவாக்கியவர். அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதில் நிச்சயம் உண்மைத்தன்மை இருக்கும் என்று உணர்ந்தேன்.

எனக்கும் இதுபோன்ற ஒரு நிலை வரும்போது ஆதரவு தெரிவிக்க யாருமே இல்லாமல் நின்று இருக்கிறேன். அந்த நிலை நயன் தாராவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆதரவு அளித்தேன், நயன் தாராவுக்கு குரல் கொடுக்க வேண்டுமென்றாலும் குரல் கொடுப்பேன் என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *