தட்டிவிட்டு அசிங்கப்படுத்திய ஆண் நண்பர்

ByEditor 2

Nov 25, 2024

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Citadel: Honey Bunny அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சமந்தாவின் நடிப்பும் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் இப்படத்தில் பல போல்டான காட்சிகளில் சமந்தா நடித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சண்டைக்காட்சியில் சமந்தா பின்னிபெடல் எடுத்தாலும் சில முத்தக்காட்சியிலும் கிளாமர் காட்சியிலும் சமந்தா நடித்திருந்தார்.

இந்நிலையில் ஆண் நண்பருடன் வெளியில் நடிகை சமந்தா சென்றுள்ளார். அப்போது சமந்தா அவரின் கையை பிடிக்க முயன்ற போது அந்த நபர் தட்டிவிட்டு சென்றுள்ளார். இதனை பாலிவுட் விமர்சகர் சமந்தாவை அசிங்கப்படுத்திய காதலர் என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *