ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தை போன்றவர் என்று கூறியுள்ள மோகினி டே, அவர்கள் இருவர் குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தங்களது 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு அடுத்த சில மணிநேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய பெண் இசைக்கலைஞர் மோகனி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக கூறினார்.
இதனை தொடர்ப்புப்படுத்தி, சமூகவலைதளங்களில் பல்வேறு அனுமானங்கள் பரவத் தொடங்கின. தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து, உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டார்.