தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை சுற்றுலா இலங்கை மகளிர் அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
நேற்று (17) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்று இவ்வாறு தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணி சார்பில் லோரா வோல்வர்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
ஒருநாள் போட்டியில் பெண்கள் அணி அதிக ஓட்டங்களை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.
அதேநேரம் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் சமரி அத்தபத்து பெற்றார்.
இலங்கை மகளிர் அணி படைத்துள்ள சாதனைகள்!
