19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

Byadmin

Feb 11, 2024

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகப்பட்சமாக Harjas Singh 55 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக Raj Limbani 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் 254 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய  அணி சார்பாக அதிகப்பட்சமாக Adarsh Singh 47 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக Mahli Beardman, Raf MacMillan ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *