நான் முட்டாள் இல்லை – குசல் அதிரடி!

Byadmin

Feb 8, 2024

இலங்கை அணியை விட அதிக அனுபவம் வாய்ந்த அணியான ஆப்கானிஸ்தான் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை என  இலங்கை கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவர் குசல் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.
கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எங்கள் அணியை விட ஆப்கானிஸ்தான் அணி அதிக போட்டிகளில் பங்குபற்றி அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. அந்த அணியில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தற்போது சிறந்த அணியாக உள்ளது.”
“எங்களிடம் இம்முறை மிகவும் சமநிலையான அணி உள்ளது. வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய மூன்று வீரர்கள் சகல துறை வீரர்களாக சிறப்பாக செயல்படுகின்றனர். இது எங்கள் அணிக்கு பலம். எங்களிடம் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பேட்டிங்கும் நன்றாக உள்ளது. ஒரு அணியாக சிறப்பாக விளையாடி இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்.
“எந்தவொரு சகல துறை வீரரும் இதுவரை 5 விக்கெட்டுக்களையும் 100 ஓட்டங்களையும் பெற்றுள்ளதாக நான் கருதவில்லை. அதை நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. அப்படி நான் எதிர்ப்பார்த்தால் நான் முட்டாளாக இருக்க வேண்டும் .ஒரு போட்டியில் 30 முதல் 40 ஓட்டங்களையும் 2 அல்லது 3 விக்கெட்டுக்களையும் பெற வேண்டும் என நான் எதிர்ப்பார்க்கிறேன்.  அதற்கு மேல் எடுத்தால் அது அவர்களின் திறமை.”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *