சீதுவ அமந்தொலுவ பிரதேசத்தில் போலியான மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று விசாரணை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளினால் மருந்து தொழிற்சாலையின் உரிமையாளரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இடத்திலுள்ள சோதனையின் போது,
8 கணினி தரவுத்தளங்கள், பாதுகாப்பு கேமரா அமைப்பு தரவுத்தளம் மற்றும் குளிர்சாதன பெட்டியில் உள்ள போலியான (immunoglobulin) அடங்கிய 10 குப்பிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, சுகாதார அமைச்சின் மற்றுமொரு போலி கடிதம் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக சுகாதார அமைச்சினால் பல போலி கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.