நேற்று (22) கொழும்பை சுற்றியுள்ள வீதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு, 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிசிடிவி கெமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் அவதானிக்கப்பட்டதாகவும், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இங்கு அவதானிக்கப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக மருங்கை மாற்றி பயணித்தல் மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் உள்ள கோடுகளுக்குள் நிற்காமல் வாகனத்தை முன்னொக்கி செலுத்துதல் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
125 பேருக்கு எச்சரிக்கை
