கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 8.20 மணியளவில் அடகு வைக்கும் நிலையத்தை திறக்கும் போது உள்ளே நுழைந்த இருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளதாக அடகுக் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
கம்பஹாவில் பாரிய கொள்ளை – சி.சி.டி.வி காணொளி
