2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 93 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் Ben Stokes 84 ஓட்டங்களையும், Joe Root 60 ஓட்டங்களையும், Jonny Bairstow 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்து வீச்சில் Haris Rauf 3 விக்கெட்டுக்களையும், Shaheen Shah Afridi, Mohammad Wasim ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதற்கமைய, 338 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் 244 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் Agha Salman அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் David Willey 3 விக்கெட்டுக்களையும், Adil Rashid, Gus Atkinson மற்றும் Moeen Ali ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.