போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் Azmatullah Omarzai ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் Gerald Coetzee 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
இதற்கமைய, 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் Rassie van der Dussen அதிகபட்சமாக 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மொஹமட் நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக Rassie van der Dussen தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வௌியேறுகிறது.
தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.