இன்று (09) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது மாணவன் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பிரபுத்த பிரபாஸ்வர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்ல பஸ்ஸில் ஏறுவதற்கு சுமார் 01 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.
இன்று காலை மாணவனின் தந்தை வீட்டில் இல்லாததால், பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்ற மாணவன், சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றபோது வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், மாணவன் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை சென்ற 12 வயது மாணவன் உயிரிழப்பு!
