ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பஸ் வண்டி தீவைத்து எரிப்பு

Byadmin

Nov 9, 2023

மட்டக்களப்பு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்  வண்டி  இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்தார்

காத்தான்குடி ஆரையம்பதியில் கல்முனை மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு –பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டி நேற்று புதன்கிழமை மாலை 7 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார். இன்று அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிசாருக்குவழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.

 மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 குறித்த பஸ் வண்டி ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *