நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்த பங்களாதேஷ்!

Byadmin

Oct 28, 2023

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் Scott Edwards அதிகபட்சமாக 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
 பந்து வீச்சில் Mahedi Hasan, Mustafizur Rahman, Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, பதிலுக்கு 230 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் Mehidy Hasan Miraz 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் Paul van Meekeren 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, உலகக்கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *