போராடி தோற்றது பாகிஸ்தான்!

Byadmin

Oct 20, 2023

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9  விக்கெட்டுக்களை இழந்து 267  ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் சற்றுமுன்னர் சதங்களை கடந்தனர்.
டேவிட் வோர்னர் 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்களுடன் 163 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஸ் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீசில் சஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுக்களையும், ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, 368 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஹிமாம் ஹுல் ஹக் 70 ஓட்டங்களையும், அப்துல்ஹா சாதிக் 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் எடம் சம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அவுஸ்திரேலியா அணி 2023 உலகக்கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *